Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
R.Maheshwary / 2022 ஒக்டோபர் 10 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ் . கே . குமார்
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு தீபாவளி பண்டிகை முற்பணமாக 15 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டுமென பெருந்தோட்டத் தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் முன் வைத்த கோரிக்கைக்கு ஒரு சில தோட்ட நிர்வாகங்கள் இணக்கம் தெரிவித்த போதிலும் அதற்கு எதிராக சிலர் கூறும் கருத்துகள், தொழிலாளர்களின் மனதை வேதனைப்படுத்தும் செயலாகும் என்று தெரிவித்துள்ள மலையக ஐக்கிய மாமன்றத்தின் தலைவர் ஏ. பீ. சுரேஷ், அதனை வன்மையாக கண்டித்துள்ளார்.
நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக உணவு பொருட்கள் உட்பட அனைத்து பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
தொழிலாளர்களிடம் இருந்த சந்தா பணம் பிடிக்காததால் தொழிற்சங்க ரீதியாகவோ தோட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தொழிலாளர்களால் முடியவில்லை.
750 ரூபாய் சம்பளம் வழங்கிய காலத்தில் கூட பொருளாதார நெருக்கடி இவ்வாறு இருக்கவில்லை. தற்பொழுது ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கபட்ட பின் நாட்டில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ளது.
தோட்ட நிர்வாகமும் சர்வாதிகாரம் போக்கை கடைபிடித்து தொழிலாளர்களை பழி தீர்க்கும் வகையில் நடந்துக்கொள்கின்றது.
அரசியலுக்காக தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களும் இன்று பிரிந்து செயல்படுவதால் இதனை தோட்ட நிர்வாகங்கள் சாதகமாக பயன்படுத்தி கொண்டு தொழிலாளர்கள் மீது அக்கரை செலுத்தாமல் தோட்ட கம்பனிகளுக்கு இலாபத்தை மாத்திரம் பெற்றுக்கொடுக்கும் வகையில் தோட்ட நிர்வாகம் செயல்படுகிறது.
எனவே,தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு தோட்டத்தொழிலாளர்களும் தொழிற்சங்க தலைமைகளும் தங்களது தொழிற்சங்க அரசியல் பேதங்களை மறந்து ஒன்றிணைந்து செயல்படவேண்டும்
மேலும் தற்போதைய பொருளாதார சூழ்நிலையை மனதில் கொண்டு தொழிலாளர்களுக்கு பாகுபாடின்றி அனைத்து தோட்டங்களிலும் தீபாவளி முற்பணமாக 15 ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொடுக்க தொழிற்சங்கங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago