Editorial / 2019 செப்டெம்பர் 20 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுதத் எச்.எம்.ஹேவா
தீபாவளிப் பண்டிகையையொட்டி, ஹட்டன் நகரில் தற்காலிகமாக அமைக்கப்படவுள்ள வர்த்தகக் கூடாரங்களுக்காக, வரி அடிப்படையில் இடங்களைப் பெற்றுக்கொடுக்க ஹட்டன்- டிக்கோயா நகர சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
அதற்கமைய, ஹட்டன்- நட்சத்திர சதுக்கம், ரயில் நிலையத்தின் பின்புறமாகவுள்ள இடம், சக்தி மண்டபத்துக்கு அருகிலுள்ள இடம் என்பன இவ்வாறு தற்காலிக வர்த்தகக் கூடாரங்களுக்காக வழங்கப்படவுள்ளன.
மேலும் ஹட்டன்- டிக்கோயா நகரசபையின் நகர மண்டபமும் வர்த்தக நடவடிக்கைகளுக்கு வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஹட்டன்- டிக்கோயா நகரசபையின் தவிசாளர் எஸ். பாலச்சந்திரன், தீபாவளி பண்டிகைக்காக தமது பொருள்களை விற்பனை செய்வதற்காக, வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பெருந்திரளான வர்த்தகர்கள், ஹட்டன் நகருக்கு வருகைத் தருவதால், அவர்கள் தமது வர்த்தக நடவடிக்கைகளை உரியமுறையில் முன்னெடுப்பதற்காக, அவர்களிடம் வரியை அறவிட எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த வரி அறவீட்டால், நகர சபைக்கு 5 மில்லியன் ரூபாய் வருமானம் கிடைக்குமென எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
6 hours ago