Editorial / 2024 ஒக்டோபர் 23 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சதீஸ்
12வயது சிறுவன்,தனக்குத் தானே தீ மூட்டி கொண்ட சம்பவம் பொகவந்தலாவ, ஜெப்பல்டன் என்.சீ. தோட்டப் பகுதியில் செவ்வாய்க்கிழமை (22) இரவு 10 மணியளவில் இடம் பெற்றதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
தந்தையும் தாயும் ஒவ்வொரு நாளும் சண்டை போட்டு கொள்வதாகவும் சம்பவ தினத்தன்று இருவருக்கிடையில் சண்டை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தாயாரை தாக்கினால் தான் தீ வைத்துக் கொள்வதாக கூறி எச்சரித்த சிறுவன், தனக்கு தானே தீ வைத்து கொண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது என பொலிஸார் தெரிவித்தனர்.
தீக்காயங்களுக்கு உள்ளான சிறுவன், பொகவந்தலாவ, மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா- கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அச்சிறுவன், பாடசாலைக்கு செல்வதில்லை என்றும், இடைவிலகிய மாணவன் என்றும் விசாரணைகளில் இருந்து மேலும் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
38 minute ago
49 minute ago
52 minute ago
59 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
49 minute ago
52 minute ago
59 minute ago