R.Maheshwary / 2021 ஒக்டோபர் 31 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேஹ்ன் செனவிரத்ன
9 மில்லிமீற்றர் துப்பாக்கிக்காக பயன்படுத்தப்படும் 100 ரவைகள், பகுதி பகுதியாக வேறாக்கப்பட்ட 10 மோட்டார் சைக்கிள்களுடன் அமெரிக்க பிரஜையுரிமையுடைய நபருடன் மற்றுமொருவர் தெல்தெனிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த அமெரிக்க பிரஜாவுரிமையுடய நபர், 27 வருடங்களாக அமெரிக்காவில் வசித்து வந்துள்ளதுடன் அவர் அமெரிக்க கடற்படையில் பணியாற்றியவர் என்றும் பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
திகன- அம்பகோட்டே பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபரின் வீட்டின் பின்புறம் மோட்டார் சைக்கிளில்கள் பல பகுதி பகுதியாக வேறாக்கப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே, துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டுள்ளன.
தான் அமெரிக்க கடற்படையில் பணியாற்றிய போதிலிருந்து குறித்த துப்பாக்கி ரவைகளை வைத்திருப்பதோடு, கடந்தாண்டு இலங்கைக்கு திரும்பியபோது, தமது பயணப்பையுடன் அவை இருந்திருக்கலாம் என்றும் சந்தேகநபர் தெரிவித்துள்ளார்.
சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (31) தெல்தெனிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதையடுத்து, சந்தேகநபர்களை 48 மணிநேரம் தடுத்து வைத்து விசாரிக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
13 minute ago
26 minute ago
37 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
26 minute ago
37 minute ago
2 hours ago