Editorial / 2019 நவம்பர் 04 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கணேசன்
பூண்டுலோயா கரஹாஹெடதென்ன பகுதியில் ரி – 56 ரக துப்பாக்கி ரவைகள், வெற்று ரவைகள் ஏனைய துப்பாக்கிகளுக்கு பயன்படுத்தப்படும் ரவைகள் மற்றும் கஞ்சா போதைபொருளுடன் முன்னாள் இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (03) மாலை முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் ரி-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் ரவைகள் 31, வெற்றுத் ரவைகள் 8, கஞ்சா 13 கிராம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
பூண்டுலோயா, கரஹாஹெடதென்ன பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 6 வருடங்களுக்கு முன்னர் இராணுவ சேவையில் இருந்து வெளியேறியுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சந்தேக நபரை எல்பொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக கூறினர்.


2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago