Editorial / 2018 ஏப்ரல் 03 , பி.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-இக்பால் அலி
முஸ்லிம் சமயம், கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சின் வேண்டுகோளுக்கமைய, கண்டி, திகன, அம்பாறை, பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்களை துருக்கி நாட்டு அரசாங்கத்தின் மூலம் புனர்நிர்மாணம் தயாராக உள்ளதாக துருக்கி நாட்டில் இருந்து வருகை தந்த பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்
முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச்.ஏ.ஹலீம் அவர்கள் இலங்கையிலுள்ள துருக்கி நாட்டுத் தூதுவராலயத்தில் முன்வைத்த கோரிக்கையை அடுத்து கண்டி , திகன, அம்பாறை ஆகிய பிரதேசத்தில் பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்களை துருக்கி நாட்டு அரசாங்கத்தின் மூலம் புனர் நிர்மாணம் செய்வதற்காக அந்நாட்டிலுள்ள பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்து கண்டி, திகன, ஆகிய பிரதேசங்களை நேற்று முன்தினம் பார்வையிட்டனர்.
துருக்கி நாட்டிலுள்ள பிரதமர் கீழ் இயங்குகின்ற துருகிஸ் டீகா நிறுவனத்தின் செயற்பாட்டாளர்களான ரபிக் மற்றும் முஹமட் ஆகிய இருவர்கள் வருகை தந்து பார்வையிட்டனர். இதில் முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர் எம்.எச்.ஏ.பாஹிம் மற்றும் அமைச்சின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இவர்கள் திகன, கும்புக்கந்துர கெங்கல்ல. பள்ளேகல, எண்ருதென்ன, அக்குறணை 8ஆம் மைல், வெலகடே ஆகிய இடங்களைப் பார்வையிட்டனர். அத்துடன் குருகொட பாடசாலையையும் பார்வையிட்டனர்.
இதில் அக்குறணையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இஸ்லாமிய கலாசார நிலையம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.
9 hours ago
21 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
21 Dec 2025