2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

“தெல்வல தோட்ட மக்களுக்கு நியாயம் வேண்டும்“

Ilango Bharathy   / 2021 ஒக்டோபர் 08 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஜித்லால் சாந்தஉதய

கஹவத்த பெருந்தோட்ட நிறுவனத்துக்குரிய எந்தானை தோட்டத்தின் தெல்வல பிரிவில் வசிக்கும் தொழிலாளர்கள், தமது குடியிருப்புகளுக்கு பின்னால் உள்ள தோட்டத்துக்குச் சொந்தமான காணிகளில் முன்னெடுத்த மரக்கறி உற்பத்திகளை தோட்ட நிர்வாகம் அழித்துள்ளமை கவலைக்குரிய விடயம் என, நிவித்திகல பிரதேச சபையின் உறுப்பினர் எம்.எம். சமிந்த குமார தெரிவித்துள்ளார்.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறும் அவர்,
சப்ரகமுவ மாகாண பிரதி பொலிஸ்மா அதிபரிடம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
200 குடும்பங்கள் 30 லயக்குடியிருப்புகளில் வசித்து வருவதுடன், கொரோனாவால்
வருமானங்களை இழந்த குறித்த மக்கள், அன்றாட உணவு வேளைக்காக ,தமது
குடியிருப்புகளுக்கு பின்புறமாகவுள்ள இடங்களில் வாழை, பாக்கு உள்ளிட்ட உற்பத்திகளை
மேற்கொண்டு வந்ததாகவும் நிவித்திகல பிரதேச சபையின் உறுப்பினர் எம்.எம். சமிந்த குமாரவின் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் இந்த மக்கள் 60 வருடங்களுக்கு மேலாக தமக்கு தேவையானவற்றை உற்பத்தி செய்து
வாழ்வாதாரத்தை கொண்டு நடத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் இந்த விடயம் தொடர்பில் நிவித்தகலை பொலிஸ் நிலையத்தில் 7 முறைப்பாடுகள்
செய்யப்பட்டிருந்தாலும் தோட்ட நிர்வாகத்தால் இரண்டு தொழிலாளர்கள் பணிநீக்கம்
செய்யப்பட்டுள்ளனர்.

எனவே கொரோனா தொற்றுக்கு மத்தியில் வாழ்வாதாரத்துக்காக பாரிய போராட்டங்களை
எதிர்நோக்கி வரும் எந்தானை தோட்ட மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுத் தருமாறும் நிவித்திகல பிரதேச சபையின் உறுப்பினர் எம்.எம். சமிந்த குமார கடிதம் மூலம் சப்ரகமுவ மாகாண பிரதி பொலிஸ்மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X