Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 டிசெம்பர் 19 , பி.ப. 02:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஆராச்சி
தெஹியோவிட்ட பிரதேச செயலகத்தின் பதிவாளர் பிரிவு மற்றும் பிரதேச செயலகத்தின் அதிகாரிகள் இணைந்து தெஹியோவிட்ட பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பெருந்தோட்ட மக்களுக்கான பல வேலைத்திட்டங்களை அண்மையில் முன்னெடுத்தனர்.
இதற்கமைய குறித்த பகுதிகளில் சட்டரீதியாக திருமணம் முடிக்காமல் தம்பதிகளாக வாழ்ந்த 10 பேருக்கு சட்டரீதியாக திருமணம் முடித்து வைக்கப்பட்டது.
அத்துடன் பிறப்புச் சான்றிதழ் அற்ற 35 சிறுவர்களுக்கு பிறப்புச் சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன்,அந்த சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டன.
மேலும் பம்பேகம, கந்தவத்த ஆகிய தோட்டங்களில் தொழில்வாய்ப்பற்ற யுவதிகளுக்காக கேகாலை மக்கள் அபிவிருத்தி மன்றத்தால் இலவசமாக நடத்தப்பட்ட பாடநெறியை நிறைவுசெய்த 31 பேருக்கு சான்றிதழ்களும் இதன்போது வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வின் பிரதம அதிதியாக கேகாலை மாவட்ட மேலதிக செயலாளர் சரிதா இலங்ககோன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
38 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
1 hours ago