R.Maheshwary / 2022 பெப்ரவரி 09 , பி.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரா.கமல்
இலங்கை கராத்தே தோ சம்மேளனம் நடாத்திய 2021ஆம் ஆண்டுக்கான தேசிய கராத்தே போட்டியில் யட்டியாந்தோட்டையைச் சேர்ந்த ஜி.ஹேணொக்சான் தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.
இந்த மாதம் 5ஆம் 6ஆம் திகதிகளில் பண்டாரகம உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்ற இப்போட்டியில், புணாகோஷி சோத்தோகான் கராத்தே சங்கத்தின், யட்டியாந்தோட்டை கிளையை பிரதி நிதித்துவப்படுத்தி பத்து கராத்தே வீர வீராங்கனைகள் பங்குபற்றினர். அனைவருமே வெற்றி பெற்றனர்.
இக்குழுவில் ஒரே ஒரு தமிழ் மாணவராக களமிறங்கிய ஜி.ஹேணொக்சான் மிகவும் திறமையாக போட்டியிட்டு தங்கப் பதக்கத்தை சுவீகரித்துக் கொண்டமை வரலாற்று சாதனையாகும்.
இவர் 9 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான ஊதா பட்டி பிரிவில் 25 எடைக்கு மேல் கும்தே போட்டியில் பங்குபற்றிய தோடு இவருக்கு கிடைத்த நான்கு தொடரையும் அதிகூடிய புள்ளியுடன் வெற்றிக் கொண்டமை விசேட அம்சமாகும்.
கே/தெஹி/ இராமகிருஷ்ணா ஆரம்ப பாடசாலையில் நான்காம் தரத்தில் கல்வி பயின்றுவரும் இம் மாணவன், யட்டியாந்தோட்டை -மீபிட்டிகந்த தோட்டத்தில் வசித்துவருகின்றார்.
5 minute ago
11 minute ago
12 minute ago
13 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
11 minute ago
12 minute ago
13 minute ago