சிவாணி ஸ்ரீ / 2020 ஜூன் 09 , பி.ப. 05:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், அனைத்து மாவட்டங்களிலும் இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பாக, ஒவ்வொரு மாகாண ஆளுநர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதென என, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்தார்.
கேகாலை மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு தேசிய வேலைத்திட்டத்தை முறையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பான விசேட கலந்துரையாடல், கேகாலை மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில், நேற்று (08) நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கேகாலை மாவட்டத்தில் மாத்திரம், இந்த வருடத்தில் இதுவரை 501 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்றும் இதுவரை எந்தவொரு மரணமும் சம்பவிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.
42 minute ago
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
50 minute ago
2 hours ago