2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

dd

தேயிலைத் துறையின் வீழ்ச்சியால் கொழுந்து கூடை வியாபாரம் பாதிப்பு

Editorial   / 2019 டிசெம்பர் 13 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவன்ஸ

தேசிய தேயிலைத் தொழிற்றுரையின் வீழ்ச்சியால் கொழுந்து கூடை வியாபாரமும் செயலிழந்துள்ளதால், அந்த வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த ஆயிரக் கணக்கானவர்களின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பதுளை, நுவரெலியா மாவட்டங்களிலுள்ள ​தொழிலாளர்களுக்காக, பதுளை – ஸ்பிரிங்வெலி பகுதியில் கூடைகள் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், கூடைநெய்யும் தொழிலில் ஈடுபட்ட வந்தவர்கள் வருமானமின்றி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த தோட்டத்தில் மாத்திரம் சுமார் 100 பேர் வரை, தொழில்வாய்ப்பை இழந்துள்ளனர் என்றுத் தெரியவருகிறது
இதேவேளை, தற்போது பெருந்தோட்டங்களில் மூங்கில் கூடைகளுக்குப் பதிலாக, பிளாஸ்டிக் கூடைகள், யூரியா உரைகளைப் பயன்படுத்துமாறு தோட்ட நிர்வாகங்கள் பணிப்பதாலும், கூடைகளைத் தயாரிப்பவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

எனவே கொழுந்து கூரை தயாரிப்பவர்களின் பொருளாதார நிலைமைக் குறித்து, மலையகத் தலைமைகள் கவனஞ்செலுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .