2021 மே 18, செவ்வாய்க்கிழமை

தேயிலைத் தூளுடன் கைதான ஐவருக்கு விளமக்கறியில்

செ.தி.பெருமாள்   / 2020 மார்ச் 15 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா பிளான்டேசனுக்கு உரித்தான பிரவுன்சிக் தோட்டத் தேயிலைத் தொழிற்சாலையிலிருந்து, தேயிலைத் தூளைத்  திருடுவதற்கு முயன்றனர் என்றக் குற்றச்சாட்டில் கைதான ஐவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு, ஹட்டன் நீதவான் நீதிமன்ற நீதவான், இன்று (15) உத்தரவிட்டார். 

மேற்படி ஐவரும், சனிக்கிழமை (14) அதிகாலை, குறித்தத் தொழிற்சாலையிலிருந்து 95,000ரூபாய் பெறுமதியான 237 கிலோகிராம் தேயிலையைத் திருவருடதற்கு முயற்சித்துள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு வழங்கப்பட்டத் தகவலையடுத்து, தொழிற்சாலைக்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபர்களைக் கைதுசெய்ததுடன், தேயிலையைக் கொண்டு செல்வதற்குப் பயன்படுத்திய வானையும் கைப்பற்றியுள்ளனர்.

அவர்களை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே, நீதவான் இவ்வுத்தரவைப் பிறப்பித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .