உமாமகேஸ்வரி / 2020 பெப்ரவரி 20 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பெரும்பாலான தேயிலைத் தொழிற்சாலைகள் மூடுவிழா கண்டு வருவதால், தோட்டத் தொழிலாளர்கள் தமது தொழில் வாய்ப்பை இழந்து வருகின்றனர்.
அரசாங்க கம்பனிகளின் தோட்டத் தொழிற்சாலைகள் மட்டுமல்லாமல் தனியார் தோட்டத் தொழிற்சாலைகளும் மூடுவிழா கண்டு வருகின்றன.
இறக்குவானை ஹொரமுல்ல தனியார் தோட்ட தேயிலைத் தொழிற்சாலை, கடந்த ஒரு வருட காலமாக மூடப்பட்டள்ளமையால், இத்தோட்டத்தில் தொழில்புரிந்த சுமார் 350 தோட்டத் தொழிலாளர்கள் தொழில் இல்லாமல் நிர்க்கதியாகியுள்ளனர்.
இத்தேயிலைத் தொழிற்சாலை மூடப்பட்டப் பின்னர், இத்தேயிலை தோட்டத்தில் பறிக்கப்படும் தேயிலைக் கொழுந்துகளை, இத்தேயிலை தொழிற்சாலையில் ஏற்றுக்கொள்ளாத காரணத்தால், கொழுந்து பறிப்பதை, தொழிலாளர்கள் தன்னிச்சையாக இடைநிறுத்திக்கொண்டுள்ளாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், இவர்கள் வேறு தோட்டங்களுக்கு கூலி வேலைகளுக்காகச் சென்று வருவதாகவும் எனினும் இரத்தினபுரி மாவட்டத்தில் தற்போது நிலவிவரும் கடும் வரட்சி காரணமாக, அவர்களுக்கு வேலை வழங்குவதற்கு மறுப்பு தெரிவிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தற்போது ஏற்பட்டுள்ள இந்நிலையிலிருந்து வெளியே வருவதற்கு, ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றைப் பெற்றுக்கொள்வதற்கு, தொழிலாளர்கள் முயன்றாலும், அதை உறுதிப்படுத்துவதற்கு, தோட்ட நிர்வாகங்கள் முன்வருவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், கடந்த காலங்களில், தங்களது ஊழியர் சேமலாப நிதியம், நம்பிக்கை நிதியம் ஆகியவற்றை, நிர்வாகம் செலுத்தவில்லை என்றும் இது குறித்து காவத்தை - எல்வேகேவத்தையிலுள்ள பெல்மதுளை மாவட்ட தொழில் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து இத்திணைக்கள அதிகாரியொருவர் கருத்துத் தெரிவிக்கையில்,
இத்தோட்டம் மூடப்பட்டுள்ள விடயம், தங்களுக்குத் தெரியாது என்றும் இது குறித்து தோட்ட நிர்வாகமும் தங்களுக்கு அறிவிக்கவில்லை என்றும் எனினும் இது குறித்து ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.
காவத்தை சமரகந்த தோட்ட தேயிலை தொழிற்சாலை உள்ளிட்ட பல தேயிலைத் தொழிற்சாலைகள் இரத்தினபுரி மாவட்டத்தில் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
34 minute ago
1 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
1 hours ago
4 hours ago