2026 ஜனவரி 19, திங்கட்கிழமை

தேயிலைத் தொழிற்சாலையை திறக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

R.Maheshwary   / 2022 பெப்ரவரி 10 , பி.ப. 02:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

கடந்த ஒரு வருடகாலமாக மூடி வைக்கப்பட்டுள்ள கொட்டகலை பெருந்தோட்ட நிறுவனத்துக்குரிய கிரிஸ்லஸ்பாம் தோட்டத் தொழிற்சாலையை திறக்குமாறு கோரி, அத்தோட்ட மக்களால் இன்று (10) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

​தோட்டத் தொழிற்சாலைக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், புனரமைப்பு செய்வதாகத் தெரிவித்து, கடந்த ஒரு வருட காலமாக குறித்த தொழிற்சாலை மூடப்பட்டிருப்பதாகவும் தொழிலாளர்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.

அத்துடன், 1,000 ரூபாய் சம்பளத்துக்காக தினமும் 20 கிலோகிராம் கொழுந்து பறிக்கப்பட வேண்டுமென தோட்ட நிர்வாகம் அழுத்தம் விடுப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

20 கிலோகிராமுக்கு குறைவாக கொழுந்து பறிக்கும் தினங்களில் தோட்ட நிர்வாகம் 450 ரூபாய் என்ற கணக்கிலேயே மாதச் சம்பளத்தை வழங்குவதாகவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்ற நிலையில், இதுதொடர்பில் தோட்ட முகாமையாளரிடம் வினவுவதற்கு எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X