Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 செப்டெம்பர் 12 , பி.ப. 03:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ரஞ்சித் ராஜபக்ஸ
மஸ்கெலியா தோட்டத்திற்குச் சொந்தமான தேயிலைத் தோட்டங்களில் உற்பத்தி செய்யப்படும் தேயிலையை ஏலத்திற்கு அனுப்ப வேண்டாம் என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் ஜீவன் தொண்டமான் தோட்டங்களில் வசிக்கும் தோட்டத் தொழிலாளர்களுக்கு பணிப்புரை வழங்கியதாக கட்சியின் உப தலைவர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
தோட்டத் தொழிலாளர்களுக்கு, நாளாந்த சம்பளம் 1000 ரூபாய் வழங்க வேண்டும் என சம்பள நிர்ணய சபையின் உத்தரவின் அடிப்படையில் தேயிலை தோட்ட நிறுவனங்கள் செலுத்தி வரும் நிலையில்,மஸ்கெலியா பெருந்தோட்டக் கம்பனி, அந்த உத்தரவை மீறி, அன்றாடம் பறிக்கும் தேயிலைக்கு மாத்திரம் கொடுப்பனவு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம், தோட்டத் தொழிலாளர்களின் பல உரிமைகள் பறிக்கப்பட்டுள்ளதாக, இது தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடுவதற்கு பல தடவைகள் வந்திருந்தும், கலந்துரையாடலில் அக்கறை காட்டாத காரணத்தினால் இவ்வாறான தொழிற்சங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக கணபதி கனகராஜ் தெரிவித்தார்.
3 hours ago
9 hours ago
17 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago
17 Aug 2025