Kogilavani / 2021 பெப்ரவரி 07 , பி.ப. 06:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராஜா மலர்வேந்தன்
பசறை யூரி தோட்டம், மாப்பாகல பிரிவைச் சேர்ந்த 56 வயது தொழிலாளியொருவர், தேயிலை மலையிலிருந்து வழுக்கி விழுந்து பரிதாபகரமாக பலியாகியுள்ளார்.
மேற்படித் தோட்டதைச் சேர்ந்த லெட்சுமணன் ராஜேந்திரன் என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே, இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வழமைபோன்று நேற்று (6) வேலைக்குச் சென்ற மேற்படித் தொழிலாளி, வீடு திரும்பாததால் குடும்பத்தினர் அவரைத் தேடிப் பார்த்தபோது தேயிலை மலைப் பகுதியில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
இது தொடர்பில், பொலிஸாருக்குத் தெரிவிக்கப்பட்டதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டுள்ளனர்.
யூரி தோட்டத்தின் வெளிவாரி மலையில் அமர்த்தப்பட்ட தொழிலாளி தொடர்பில், உரிய தரப்பினர் கரிசனைக்கொள்ள வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
20 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
30 minute ago