Editorial / 2019 ஓகஸ்ட் 23 , பி.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
பண்டாரவளை - நெலுவ ஸ்ரீ சிவசுப்பரமணியன் கோவிலில், இன்று(23) நடைபெற்ற தேர் உற்சவத்தின் போது இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று, அட்டாம்பிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
கோவிலின் தேர், நெலுவ - பதுளை பிரதான வீதிக்குத் திரும்பும் போது வேகமாக வந்த லொறியொன்று, கட்டுப்பாட்டை இழந்து தேருடன் மோதியுள்ளது.
இதன்போது வீதியில் பயணித்த பக்தர் ஒருவர் மீது தேர் சரிந்து விழுந்துள்ளது.
இதன் காரணமாகவே குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று அட்டாம்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் அட்டாம்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை, அட்டாம்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நெலுவ பகுதியில் கடும்மழை பெய்து வருகின்றமையும் குறிப்பிடதக்கது.
16 minute ago
32 minute ago
39 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
32 minute ago
39 minute ago
52 minute ago