Editorial / 2019 ஓகஸ்ட் 21 , பி.ப. 03:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஸ் கீர்த்திரத்ன
இலங்கையில் வருடமொன்றுக்கு ஐம்பது இலட்சத்து ஐம்பதாயிரம் மெட்ரிக்தொன் மரக்கறிகளும் பழங்களும் வீண்விரயமாக்கப்படுவதாகவும் இதனால் 67 பில்லியன் ரூபாய் இழக்கப்படுவதாகவும் விசாய இராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிஹார தெரிவித்தார்.
மாத்தளையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்துரைத்த அவர்,
உற்பத்திகளை அறுவடைச் செய்யும்போதும் அவற்றை கொண்டு செல்லும்போதும் நூற்றுக்கு 30 சதவீதம் வீண்விரயமாக்கப்படுவதாகவும் இவற்றைத் தடுப்பதற்கான வழிவகைகளைக் கண்டறிய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அறுவடை தொழில்நுட்ப நிறுவனமானது, விவசாய அமைச்சின் கீழ் இருப்பதால், உற்பத்திகளின் சேத விவரங்களைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
முதற்கட்டமாக ஐந்து இலட்சம் பிளாஸ்டிக் கூடைகளை விவசாயிகளுக்கு இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் 30 சதவீதத்தில் 10 சதவீத சேதத்தையேனும் தடுக்க முடியும் என்ற எதிர்பார்ப்பிலேயே கூடைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தமது உற்பத்திகளை வீண்விரயமாக்காமல் சந்தைப்படுத்துவதற்கும் சந்தைப்படுத்தப்படும் உற்பத்திகளைப் பாதுகாப்பதற்கும் சம்பந்த்தப்பட்டத் தரப்பினரும் முன்வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago