Editorial / 2019 ஓகஸ்ட் 22 , பி.ப. 02:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.கணேசன், சுதத் எச்.எம். ஹேவா
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, நுவரெலியா மாவட்டத்திலுள்ள பல வைத்தியசாலைகளில், நோயாளர்கள் மருந்துகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் திண்டாடினர்.
அனைத்து வைத்தியசாலையின் வைத்தியர்களும் இன்று (22) முழு நேர பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொண்டிருந்தாலும் ஒரு சில வைத்தியர்கள், கடமையில் ஈடுபட்டிந்தனர். இதனால் சிகிச்சைக்கு வந்திருந்த பலரும், வரிசையில் காத்திருக்க முடியாமல், மீண்டும் வீட்டுக்குத் திரும்பினர்.
ஹட்டன் - டிக்கோயா ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகை தந்த நோயாளர்கள் திருப்பி அனுப்பப்பட்டமையால், வைத்தியசாலையின் தாதிமார்களுக்கும் நோயாளர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.
சில வைத்தியசாலைகளில் மாத்திரம், வைத்திய சேவைகள் தாதிமார்களால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago