2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

’தொழிற்சங்க பேதங்களை மறந்து ஒன்று சேர்ந்தால் பாடம் கற்பிக்கலாம்’

Kogilavani   / 2021 ஜனவரி 27 , பி.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.ஷங்கீதன்

தொழிற்சங்க பேதங்களை மறந்து ஒன்றுசேர்ந்தால் கம்பனிகளுக்குப் பாடம் கற்பிக்க முடியும் என்று தெரிவித்துள்ள இலங்கைத் தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் பொதுச்செயலாளர் எஸ்.சதாசிவம், தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தைப் பெற்றுக்கொடுக்க முன்வருமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.

தொழிலாளர் ஐக்கிய முன்னணியின் நுவரெலியா காரியாலயத்தில், நேற்று (27) நடைபெற்ற தோட்டக் கமிட்டித் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களுடனான கலந்துரையாடலின்போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்துரைத்த அவர், ஆயிரம் ரூபாய் சம்பளம் மட்டும் அல்ல தொழிலாளர்கள் இன்னும் பல உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு, தொழிற்சங்க அரசியல் பேதங்களை மறந்து ஒன்றுப்பட்டு போராடுவதற்கு முன்வருவோமேயானால், கம்பனிகளின் அடாவடித் தனத்துக்குப் பாடம் கற்பித்து தொழிலாளர்களுடைய உரிமைகளைப் பெறுவதற்கு வழிவகுக்க முடியும் என்றார்.  

'கடந்த காலங்களில் பெருந்தோட்டப் பகுதிகளில், தொழிற்சங்கப் போராட்டங்களை நடத்தி தொழிலாளர்களின் உரிமைகளை பெற்றுக்கொண்டோம். அன்று தொழிற்சங்கங்கள் தொழிற்சங்கங்ளாக இயங்கின. ஆனால் இன்று தொழிற்சங்கங்கள் அரசியல் கட்சிகளாக மாறியுள்ளதால், தொழிலாளர்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது' என்றார். 

இன்று பெருந்தோட்டங்களில் தொழிலாளர்கள் படுகின்றகஷ்டங்களையும் தொழிலாளர்கள் வஞ்சிக்கப்படுவதையும் பார்க்கின்றபோது மிகவும் வேதனையாக உள்ளது' என்றும் அவர் தெரிவித்தார்.

'கம்பனிகளின் அடாவடித் தனத்துக்குப் பாடம் கற்பித்து தொழிலாளர்களுடைய உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு, பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அனைவரும் தொழிற்சங்க அரசியல் பேதங்களை மறந்து ஒன்றுபட்டு போராட முன்வர வேண்டும்' என்றும் அவர் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X