2025 ஜூலை 16, புதன்கிழமை

தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்...

Kogilavani   / 2017 செப்டெம்பர் 07 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன், எஸ்.சதிஸ்

கூட்டொப்பந்தத்துக்கு முரணாக தோட்ட நிர்வாகம் செயற்பட்டு வருவதாகக் கூறி, ஸ்டெதன் தோட்டத் தொழிலாளர்கள், இன்று  காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஹட்டன்- கொழும்பு பிரதான வீதி, ஸ்டெதன் பகுதியில், இன்று  காலை 10.30 மணயளவில் இவ்வார்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தோட்ட நிர்வாகமானது, கூட்டொப்பந்தத்துக்கு அவைமாக செயற்படாது,  நாளொன்றுக்கு 18 கிலோகிராம் தேயிலைக் கொழுந்தை பறிக்குமாறு, தொழிலாளர்களை வற்புறுத்துவதாகவும், அவ்வாறு கொழுந்து பறிக்காத தொழிலாளர்களுக்கு, மேலதிகக் கொடுப்பனவை வழங்க முடியாது என்று தோட்ட நிர்வாகம் கூறுவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

கொழுந்து விலைச்சல் இல்லாதக் காலத்தில் கொழுந்தைப் பறிக்குமாறு கோரினால் எவ்வாறு கொழுந்து பறிக்க முடியுமென்று, ஆர்ப்பாட்டக்காரர்கள் இதன்போது கேள்வி எழுப்பினர்.

எனவே, இவ்விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், தொழிலாளர் கோரிக்கை விடுத்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .