Kogilavani / 2021 பெப்ரவரி 03 , பி.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆசியாவின் முத்தென வர்ணிக்கப்படும் எமது தாய் நாடு, தனது 73 ஆவது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகின்ற இந்தச் சந்தர்ப்பத்தில் சுதந்திர தின வாழ்த்துக்களை நாட்டு மக்களுக்கு தெரிவிப்பதுடன் தொழிலாளர்கள் முழுமையான சுதந்திரத்தை அனுபவிப்பதற்கான வழிவகைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று, இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
'ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து சுதந்திரம் அடைந்த நாடு என்ற வகையில், நாட்டிலுள்ள அனைத்து மக்களும் இனம்,மொழி, மதம் என்பவற்றைக் கடந்து ஒற்றுமையாக நம் தாய்நாட்டை கட்டியெழுப்ப வேண்டும்' என்றார்.
'மேலும் என்னுடைய தொப்புள்கொடி உறவுகளான பெருந்தோட்ட மலையக மக்கள், அவர்களுடைய தொழில் உரிமை, தொழில் சுதந்திரம், தொழில் பாதுகாப்பு, இருப்புரிமை இவை அனைத்தை
யும் தக்கவைத்துக் கொள்வதற்கும் முழு நிறைவான சுதத்திரத்தை அனுபவிக்க வழி வகுப்பதும் எங்களுடைய கடமையாகும்' என்றார்.
20 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
30 minute ago