2025 ஜூலை 16, புதன்கிழமை

தொழிலாளர் நலன் தொடர்பில் கலந்துரையாடல்

Kogilavani   / 2017 செப்டெம்பர் 07 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடாளுமன்ற கல்வி உயர்கல்வி மற்றும் மனிதவள அபிவிருத்தி மேற்பார்வைக் குழுக் கூட்டம், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளருமான வடிவேல் சுரேஷ் தலைமையில், நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் தொழில் ஆணையாளர், பிரதித்தொழில் ஆணையாளர், உதவித் தொழில் ஆணையாளர்கள் மற்றும் பிரதேச உதவித் தொழில் ஆணையாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது, ஐஸ்லபி தோட்ட மக்களின் பிரச்சினை தொடர்பாக தொழில் ஆணைக்குழு எடுத்த தீர்மானத்துக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் நன்றி தெரிவித்தார்.

அத்துடன்,  தேயிலை, தென்னை, இறப்பர் ஆகியவற்றின் விலைகள் உயர்வடைந்திருப்பதால், அதற்கேற்ற வகையில், தொழிலாளர்களின் சம்பளத்தை உயர்த்தக்கூடிய வாய்புகள் தொடர்பாகவும் அவர் கலந்துரையாடினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .