Editorial / 2026 மார்ச் 04 , பி.ப. 03:14 - 0 - {{hitsCtrl.values.hits}}

கௌசல்யா
நுவரெலியா, ரம்பொடை - வெதமுல்ல தோட்டத்தில் தேயிலை மலையில் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி ஒருவர் விஷப்பாம்பு தீண்டிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வெதமுல்ல தோட்ட தேயிலை மலையில் செடிகளைத் துப்புரவு செய்யும் பணியில் தொழிலாளர்கள் இன்று காலை 10:30 மணியளவில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது, தேயிலை செடியின் அடிவாரத்தில் மறைந்திருந்த 'விரியன்' பாம்பு ஒன்று அங்கிருந்த தொழிலாளியைத் தீண்டியுள்ளது.
இச்சம்பவத்தில் ரம்பொடை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை ஒருவரே காயமடைந்துள்ளார்.
பாம்பு தீண்டியதையடுத்து, குறித்த நபர் சக தொழிலாளர்களின் உதவியுடன் உடனடியாக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.
அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார்.
41 minute ago
49 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
49 minute ago
2 hours ago