2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

தொழில்நுட்பப் பீடத்துக்கு அடிக்கல் நாட்டல்

Kogilavani   / 2021 ஜனவரி 27 , பி.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.குமார்

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய தொழில்நுட்ப பீடத்துக்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு, நேற்று (26) நடைபெற்றது.  

பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா ஆகியோர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்கள்.

மேலும் இந்நிகழ்வில்  சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பேராசிரியர் உதய ரத்நாயக்க  உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

மேற்படி தொழில்நுட்பப் பீடத்தின் நிர்மாணப் பணிகளுக்காக 2,049 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக, பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் உதய ரத்நாயக்க தெரிவித்தார். 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X