2026 மே 02, சனிக்கிழமை

தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி பணமோசடி செய்தவர்களுக்கு விளக்கமறியல்

எம். செல்வராஜா   / 2019 மார்ச் 19 , மு.ப. 03:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஊவா மாகாண சபையில் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி, பல இலட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்த மூவரை, பதுளை நீதவான் நீதிமன்ற நீதிபதி. இன்று (19) வரை விளக்கமறியலில் வைக்குமாறு, நேற்று (18) உத்தரவிட்டார்.  

ஊவா மாகாண சபையில் சாரதிகளாக இருந்து வரும் இருவரும், சபையின் பாதுகாப்புக் கடமையிலிருந்து வரும் ஒருவரு​மே, இந்த மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.  

ஊவா மாகாண சபையில், மூவருக்குத் தொழில் பெற்றுத் தருவதாகக் கூறி, அவர்களிடமிருந்து, 3 இலட்சம் ரூபாய் பணத்தை இவர்கள் பெற்றுக்கொண்டுள்ளதாக, ஏமாற்றப்பட்ட மூவரும், பதுளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். 

இதையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளையடுத்தே, இந்த மூவரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .