சுஜிதா / 2019 ஏப்ரல் 19 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசாங்கத்தின் கம்பெரலிய வேலைத்திட்டத்தின் கீழ், நுவரெலியா மாவட்டத்துக்குட்பட்ட பல தோட்டப்புறங்களிலும், நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் இருந்த வீதிகளைப் புனரமைப்பதற்கும் சகல வழிபாட்டுத் தளங்களை புனரமைப்பதற்கும், குளங்களைப் புனரமைப்பதற்கும் என, பாரிய நிதியொதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில், பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திசாநாயக்கவின் பணிப்புரைக்கமைய, நுவரெலியா மாவட்டத்துக்கு கம்பெரலிய வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்காக, 18.65 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்று, தலவாக்கலை லிந்துலை நகர சபைத் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் நுவரெலியா மாவட்ட இணை அமைப்பாளருமான தேசபந்து அசோகர் சேபால தெரிவித்தார்.
அதற்கமைய, இம்மாதம் 12, 16ஆம் திகதிகளில், நுவரெலியா பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சில தோட்டப் பகுதிகளுக்கானப் பாதைகளுக்கு கொங்கிரீட் இடுவதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்றது.
31 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
3 hours ago