2026 ஏப்ரல் 21, செவ்வாய்க்கிழமை

திகா-செந்தில் குழு மோதல் வழக்கு ஒத்திவைப்பு

Kanagaraj   / 2016 செப்டெம்பர் 26 , மு.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராசந்திரன், ரஞ்சித்ராஜபக்ஷ

அமைச்சர் பழனி திகாம்பரத்தின் ஆதரவாளர்கள் அடங்கிய குழுவினருக்கும், ஊவா மாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆதரவாளர்கள் அடங்கிய குழுவினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பிலான வழக்கு நவம்பர் மாதம் 21ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு மத்திய மாகாணசபை தேர்தலின் போது கொட்டகலை மற்றும் கினிகத்தேன பகுதிகளில் வைத்தே இவ்விரு குழுவினருக்கும் இடையில் மோதல் சம்பவம் இடம்பெற்றது.

இந்தச் சம்பவம் தொடர்பில் வழக்கு, கினிகத்தேன பொலிஸாரும் ஹட்டன் பொலிஸாரும் ஹட்டன் மாட்ட நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தனர். அந்த வழக்கு இன்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, பதில் நீதவான் கருணாகரன் வழக்கை ஒத்திவைத்தார்.

வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்ட போது,  அமைச்சர் பழனி திகாம்பரம்  ஊவாமாகாண அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

இதேவேளை, மத்திய மாகாண விவசாய அமைச்சர் எம்; ராமேஸ்வரன் மாகாணசபை உறுப்பினர்களான  எம். உதயகுமார், சக்திவேல், எம்.ராமசாமி முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர் பீ.ராஜதுரை உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் பிரசன்னமாய் இருந்தனர்.   

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .