Sudharshini / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஞ்சித் ராஜபக்ஷ
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ஒவ்வொரு தொழிலாளிக்கும் தலா 15,000 ரூபாய் முற்பணத்தை பெற்றுக் கொடுக்க தமிழ் முற்போக்கு கூட்டணி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதென கல்வி இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது,
'தோட்ட தொழிலாளர்களின் சம்பள பிரச்சினைக்கு கைச்சாதிடும் தொழிற்சங்கங்களின் ஒன்றான இலங்கை தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளர் அமரர்.வேலாயுதம் நம்முடன் இல்லை. இருந்தும் எதிர்வரும் காலத்தில் அரசாங்கத்துடன் சம்பள பிரச்சினையை பேசி ஒரு இணக்கப்பாட்டுக்கு வரும் வகையில் தமிழ் முற்போக்கு கூட்டணி செயற்படும்.
தொழிலாளர்களுக்கு கடந்த மார்ச் மாதத்திலிருந்து சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டியுள்ளது. இந்நிலையில் இதுவரை பேச்சு வார்த்தை பேச்சளவில் மட்டுமே உள்ளது. எனவே, சம்பள நிலுவையிலிருந்து தீபாவளி முற்பணத்தை வழங்கிவிட்டு, சம்பள பேச்சுவார்த்தையின்போது மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் தமிழ் முற்போக்கு கூட்டணி முன்னின்று செயற்படும்' என அவர் கூறினார்.
42 minute ago
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
50 minute ago
2 hours ago