2026 மே 09, சனிக்கிழமை

dd

’த.மு.கூவின் நிதானத்தால் பாரியளவு அபிவிருத்திகள்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 29 , பி.ப. 12:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் முற்போக்குக் கூட்டணியின் நிதானமான செயற்பாடுகள் காரணமாகவே, பெருந்தோட்டங்களில் பாரியளவு அபிவிருத்தி செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் தெரிவித்தார்.

பதுளையில், இன்று (29) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழ் முற்போக்குக் கூட்டணி பிரிந்து செயற்பட்டால், அது, மற்றைய தரப்புகளின் வெற்றியாக ​அமைந்துவிடும் என்றும் எனவேதான், பிரிவுக்கு இடம்கொடுக்காமல், கூட்டணி, நிதானமாகச் செயற்பட்டு வருவதாக அவர் கூறினார்.

உலக வங்கியின் எந்தவொரு திட்டமும், இதற்கு முன்னர்​ பெருந்தோட்டங்களுக்கு வருவதில்லை என்று குறிப்பிட்ட அவர், ஆனால், கூட்டணியின் முயற்சியால், தோட்டப்பகுதிகளுக்கு இந்தத் திட்டங்கள் தற்போது முன்னெடுக்கப்படுவதாக அவர் கூறினார்.

ஆனால், இதன்மூலம் மலையகத்திலுள்ள அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிட்டதாக கருத முடியாது என்றும் எனினும் மலையகத்தின் முன்னேற்றம் வேகமாகி வருவதாகவும் அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .