Niroshini / 2016 மே 06 , மு.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மு.இராமசந்திரன், ரஞ்சித் ராஜபக்ஷ
தௌ்ளுப் பூச்சி பரவியதால் ஹட்டன் கல்வி வலயத்துக்கு உட்பட்ட என்பீல்ட் தமிழ் மகா வித்தியாலயம் தற்காலிகமாக நேற்று (05) மூடப்பட்டது.
இப்பாடசாலையின் வகுப்பறைகளில் தௌ்ளுப் பூச்சி பரவியிருந்ததால், மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. இந்நிலையில் பெற்றோரின் உதவியுடன் வகுப்பறைகளுக்கு மருந்து தெளிக்கப்பட்டது.
இதனால், மாணவர்களின் ஆரோக்கியத்தை கருத்திற்கொண்டு ஹட்டன் கல்விப் பணிமனையின் அனுமதியுடன் நேற்று, பாடசாலையில் கற்றல் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டதுடன் மாணவர்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டதாக பாடசாலையின் அதிபர்
எஸ்.எம்.குரூஸ் தெரிவித்தார்.
இதேவேளை, பாடசாலையின் கற்றல் நடவடிக்கைகள் வழமைப்போன்று இன்று நடைபெறும் எனவும் அவர் கூறினார்.
10 minute ago
23 minute ago
34 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
23 minute ago
34 minute ago
2 hours ago