மொஹொமட் ஆஸிக் / 2019 பெப்ரவரி 07 , மு.ப. 10:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
பூஜாப்பிட்டியவில் வசிக்கும் நீதிமன்ற பதிவாளர் ஒருவரது வீட்டை உடைத்து, 460,000 ரூபாய் பெறுமதியான தங்க நகைகளைத் திருடினார் என்ற சந்தேகத்தில், நபரொருவரை இரண்டு வருடங்களுக்குப் பின்னர் பூஜாப்பிட்டிய பொலிஸார், நேற்று (6) கைதுசெய்துள்ளனர்.
பூஜாப்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
திருடப்பட்ட நகைகள், அடகு வைக்கப்பட்டுள்ளதென விசாரணைகளில் தெரியவந்ததைத் தொடர்ந்து, பொலிஸார் நகைகள் அடகு வைக்கப்பட்ட வியாபா நிலையத்துக்குச் சென்று, சுமார் 350,000 பெறுமதியான நகைகளை மீட்டுள்ளனர் என்று தெரியவருகிறது.
மேற்படி நபரை, கலகெதர நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago