Janu / 2026 ஜனவரி 22 , பி.ப. 03:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
வாடிக்கையாளர் போல் வந்து தங்க நகையை திருடிச் சென்ற சம்பவம் ஹட்டன் நகர் மத்தியில் அமைந்துள்ள நகை கடையொன்றில் வியாழக்கிழமை (22) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர், குறித்த நகை கடைக்கு வந்து பல தங்க சங்கிலிகலை பார்வையிட்டு, ஒரு தங்கச் சங்கிலியை தெரிவு செய்து அதற்கான பற்றுச்சீட்டினை எழுதி பெற்றுக் கொடுக்கும் போது, தங்க நகையை எடுத்துகொண்டு தப்பியோடிய காட்சி குறித்த கடையில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இது தொடர்பாக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் குறித்த கடையின் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பவத்தின் போது கடை உரிமையாளர் வெளியில் சென்றுள்ளதாகவும் கடையில் பணிப்புரியும் இரண்டு பெண்கள் மாத்திரம் இருந்ததாகவும் பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
திருடிச் சென்ற நகையின் பெறுமதி இரண்டு லட்சத்து எண்பத்தொன்பதாயிரம் ரூபாய் என தெரியவந்துள்ளதுடன் இந்த சம்பவம் குறித்து சிசிடிவி காணொளி ஊடாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
எஸ். சதீஸ்

2 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
4 hours ago