Princiya Dixci / 2016 மே 24 , மு.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம். செல்வராஜா
வெள்ளவாய நகரிலுள்ள நகைக்கடையொன்றில் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேகநபர்களை, எதிர்வரும் 31ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு வெள்ளவாய நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ. அபேசிங்க, நேற்று திங்கட்கிழமை (23) உத்தரவிட்டார்.
வெள்ளவாய நகரின் பிரபல நகைக்கடையொன்றுக்குள் கடந்த 15ஆம் திகதி, மேற்படி ஐந்து சந்தேகநபர்களும் உட்புகுந்து தங்கநகைகளைக் கொள்ளையிட முயற்சித்த போதிலும் அவர்களினால் நகை வைப்பகப் பெட்டியைத் திறக்க முடியாமல் போய்விட்டது.
எனினும், அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த வெள்ளி நகைகளையும் அலைபேசிகளையும் எடுத்துக்கொண்டு சந்தேகநபர்கள் ஐவரும் தப்பிச் சென்றுள்ளனர்.
அத்துடன், மேற்படி நகைக்கடை ஊழியர்களையும் இவர்கள் கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
சி.சி.டீ.வி கமெரா உதவியுடன் மேற்குறிப்பிட்ட சந்தேகநபர்களைக் வெள்ளவாய பொலிஸார் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
21 minute ago
34 minute ago
45 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
34 minute ago
45 minute ago
2 hours ago