2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

நடமாடும் சேவையால் பயனடைந்த தோட்ட மக்கள்

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 15 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

  என்.ஆராச்சி

தெரணியகல பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட மியனவிட்ட, கொஸ்கஹகந்த, அசமானகந்த ஆகிய தோட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கான நடமாடும் சேவையொன்று, அண்மையில் மியனவிட்ட- சரஸ்வதி தமிழ் வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இதன்போது பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை என்பவற்றை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன்,  பெண்கள் மற்றும் சிறுவர்களின் பிரச்சினைகளுக்கும் தீர்வுகள் வழங்கப்பட்டன.

மேலும் தொழில்வாய்ப்புகளைத் தேடும் இளைஞர், யுவதிகளுக்கான பயிற்சிகள், தொழிற்றுரைகள் தொடர்பான தெளிவுப்படுத்தல்கள் என்பன ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

இந்த நடமாடும் சேவை தெரணியகல பிரதேச செயலாளர் மதுஷானி சில்வா, மியனவிட்ட தோட்ட நிர்வாகம், அவிசாவளை தொழிலாளர் அலுவலக அதிகாரிகள், தெரணியகல பொலிஸ் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X