Ilango Bharathy / 2021 ஒக்டோபர் 07 , மு.ப. 07:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
மஹேஸ் கீர்த்திரத்ன
இரத்தோட்டை பிரதேச்சபைக்குரிய வராப்பிட்டிய கிராமத்துக்குச் செல்லும் வீதி, பல
வருடங்களாக பயன்படுத்த முடியாத நிலையில் சேதமடைந்துள்ளதால், அதனை விரைவாக
புனரமைத்து தருமாறு கோரி, இரத்தோட்டை பிரதேச சபையின் ஸ்ரீ லங்கா பொதுஜன
பெரமுனவின் உறுப்பினரான சந்திமா கவிரத்ன நடுவீதியில் அமர்ந்து போராட்டம் ஒன்றை
முன்னெடுத்தார்.
நேற்றைய (6) தினம் இந்த போராட்டத்தை முன்னெடுத்த அவர், கடந்த 4 வருடங்களாக இந்த
வீதியின் நிலை தொடர்பில், பிரதேச சபை அமர்வுகளில் முன்வைத்த போதும், எந்தவொரு
அதிகாரியும் இதனை புனரமைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
எனவே இந்த வீதியை புனரமைப்பது தொடர்பான தீர்மானத்தை சம்பந்தப்பட்டவர்கள் எடுக்கும் வரை, தான் போராட்டத்தை கைவிடப்போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .