2025 மே 13, செவ்வாய்க்கிழமை

நடுவீதியில் வைத்து மனைவியை கத்தியால் குத்திய கணவன்

Editorial   / 2023 ஏப்ரல் 27 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதான வீதியில் வைத்து  கணவன் தனது மனைவியை கத்தியால் குத்திய சம்பவமொன்று கம்பளை மரியாவத்த கொஸ்கொல் பகுதியில்  இடம்பெற்றுள்ளது. 

கொஸ்கொல்ல பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட இரண்டு பிள்ளைகளின் தாய், இரண்டு பிள்ளைகளையும் பாடசாலைக்கு இன்று (27) அழைத்து சென்று கொண்டிருந்த போது,   பின் தொடர்ந்து வந்த கணவன், மனைவியின் தலை முடியை பிடித்து கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.

கத்தி குத்துக்கு இலக்கான 44 வயதுடைய  சமந்தி இனோக்கா ரணசிங்க கம்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அதி தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்,

குடும்ப தகராறு காரணமாக ஆறு மாதங்களாக இவர்கள் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர், மேலதிக விசாரணைகளை கம்பளை பொலிஸார் மற்றும்  soco பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

நவி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X