Janu / 2026 ஏப்ரல் 05 , பி.ப. 02:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
காசல்ரீ நீர்த்தேக்கத்துடன் இணையும் கெசல்கமுவ ஓயாவில் சனிக்கிழமை (04) அன்று நீராட சென்ற நிலையில் காணாமல் போன பாடசாலை மாணவன், இன்று (05) ஞாயிற்றுக்கிழமை இராணுவ சுழியோடிகளினால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நோர்வூட் தோட்டத்தை சேர்ந்த 16 வயதுடைய வாகீசன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். இவர் நோர்வூட் அயரபி தமிழ் மகா வித்தியாலயத்தில் சாதாரண தரத்தில் கல்வி பயின்று வந்த மாணவன் என்பது குறிப்பிடத்தக்கது.
கெசல்கமுவ ஓயாவில் உள்ள 'சில்வர் வாலா' எனும் பகுதியில் தனது நண்பர்கள் சிலருடன் குறித்த மாணவன் நீராட சென்றுள்ளார். இதன்போது அவர் நீரில் மூழ்குவதை கண்ட நண்பர்கள், அவரை காப்பாற்ற கடுமையாக முயற்சி செய்துள்ளனர். எனினும், அந்த பகுதியின் அதிக ஆழம் காரணமாக அவர்களது முயற்சி தோல்வியடைந்த நிலையில், மாணவன் நீருக்கடியில் மூழ்கியுள்ளார்.
நண்பர்கள் வழங்கிய தகவலின் பேரில், நோர்வூட் பொலிஸார் உடனடியாக செயற்பட்டு உள்ளூர் மக்களின் உதவியுடன் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். எனினும், மாணவனை கண்டுபிடிக்க முடியாத நிலையில், ஞாயிற்றுக்கிழமை (05) அன்று இராணுவ சுழியோடிகள் வரவழைக்கப்பட்டு விசேட தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
சுமார் 2 மணி நேர தீவிர தேடுதல் போராட்டத்தின் பின்னர், ஆற்றின் ஆழமான பகுதியிலிருந்து மாணவனின் சடலம் மீட்கப்பட்டது.
தற்போது மாணவனின் சடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையின் சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. சட்ட வைத்திய அதிகாரியின் முன்னிலையில் உடற்கூற்று பரிசோதனைகள் நிறைவடைந்த பின்னர், சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இச்சம்பவம் தொடர்பில் நோர்வூட் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செ.தி.பெருமாள், எஸ் சதீஸ்

59 minute ago
1 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
1 hours ago
3 hours ago
5 hours ago