Janu / 2026 ஏப்ரல் 05 , மு.ப. 10:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
காசல்ரீ நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பிரதான ஆறுகளில் ஒன்றான கெசெல்கமுவ ஓயாவில் நீராட சென்ற இளைஞன் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
தனது நண்பர்களுடன் கெசெல்கமுவ ஓயாவில் சனிக்கிழமை (04) மாலை நீராடிக்கொண்டிருந்த போதே குறித்த இளைஞன் நீரில் மூழ்கிக் காணாமல் போயுள்ளார்.
காணாமல் போனவர் நோர்வூட் என்.சி பிரிவை சேர்ந்த 16 வயதுடைய சசிதரன் வாகீசன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். நீரில் மூழ்கிய இளைஞன் காசல்ரீ நீர்த்தேக்க பகுதியை நோக்கி அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
காணாமல் போன இளைஞனை தேடும் பணிகளுக்காக கடற்படையினரின் உதவி கோரப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை (05) காலை கடற்படையின் சுழியோடிகள் (Divers) சம்பவ இடத்திற்கு வருகை தந்து தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும், அதன் பின்னரே மேலதிக விபரங்களை அறிய முடியும் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

9 minute ago
22 minute ago
33 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
22 minute ago
33 minute ago
2 hours ago