Janu / 2026 ஜனவரி 13 , பி.ப. 12:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேகாலை, தெரணியகலவில் உள்ள நூரி தோட்டத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவனின் சடலம், மரணத்திற்கான காரணம் உறுதிப்படுத்துவதற்காக திங்கட்கிழமை (12) அன்று அவிசாவளை நீதவான் பிரமோத் ஜெயசேகர முன்னிலையில் தோண்டி எடுக்கப்பட்டதாக நூரி பொலிஸார் தெரிவித்தனர்.
நூரி தோட்டத்தைச் சேர்ந்த 14 வயதுடைய சந்திர குமார் ரஞ்சித் குமார் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுவன் ஜனவரி 2 ஆம் திகதி தனது தாய் மற்றும் தந்தையுடன் வீட்டில் இருந்த போது மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதுடன், நூரி பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் எழுந்த சந்தேகங்களின் அடிப்படையில் சிறுவனின் தாய் மற்றும் தந்தை கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிறுவனின் மரணம் குறித்து முறையான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொணரக் கோரி நூரி மக்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் கடந்த 6 ஆம் திகதி ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
8 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
2 hours ago
2 hours ago