Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Sudharshini / 2015 ஒக்டோபர் 26 , மு.ப. 11:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
இக்பால் அலி
'கடந்த கால ஆட்சியில் முஸ்லிம்களாகிய நாங்கள் பல பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தோம். இன்று எமது நாட்டில் ஒரு நல்லாட்சி உருவாகியுள்ளது. அதன் காரணமாக கடந்த காலத்தை போன்றல்லாமல் அனைவரும் ஒன்றிணைந்து மன நிம்மதியுடன் ஒற்றுமையுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம்' என தபால், தபால்துறை முஸ்லிம் சமய அமைச்சர் அப்துல் அலி மொஹமட் ஆஸிம் தெரிவித்தார்.
அக்குரணை, தெலும்புகஹவத்தை அல் மத்ரசதுல் அஷ்ரபியாஹ் அரபுக் கல்லூரியில், முஹர்ரம் ஹிஜ்ரி 1437 புதுவருட நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (25) நடைபெற்றது.
அதிபர் அஷ்ஷெய்க் ஏ.ஜே.எம்.சல்மான் பாரிஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறினார்.
இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,
'உலகம் மிக வேகமாகச் சுழன்று கொண்டிருக்கின்றது. உலக மாற்றத்துக்கு ஏற்ப எமது நடத்தைகள், மனப்பாங்குகள், வாழ்க்கை முறைமைகள், சூழல்கள் மாறி வருகின்றன. மாற்றங்களுக்கு ஏற்ப நாமும் மாற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். ஆனால், அது எந்த மாற்றமாக இருந்தாலும் இஸ்லாமிய வாழ்க்கை வழிமுறையிலிருந்து யாரும் வழி தவறிச் செல்ல முடியாது. இஸ்லாம் எக்காலத்திலும் சிறந்த வாழ்க்கை வழிகாட்டல்களை வழங்கிக் கொண்டிருக்கிறது.
அந்த வகையில் உலகில் வாழும் 160 கோடி முஸ்லிம்கள், ஹிஜ்ரி 1437 புதிய முஹர்ரம் புதுவருடத்தை கொண்டாடிக் கொண்டிருக்கின்றார்கள்.
சூரியன், சந்திரனை அடிப்படையாகக் கொண்டே ஏனைய மதத்தவர்கள் வருடத்தை கணக்கிடுகின்றனர். ஆனால், முஸ்லிம்கள் மக்காவிலிருந்து மதினா சென்ற வரலாற்று மிக்க சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டே வருடத்தை கணிப்பிடுகின்றனர்.
இது நீட்ச வருடம் என்று அழைக்கப்படுகிறது. நீட்ச வருடத்தில் முதல் மாதம் தான் முஹர்ரம் மாதம். பிறை கணிப்பீட்டை வைத்து இஸ்லாமிய மாதங்கள் உதயமாகின்றன. நோன்பு, ஹஜ். ஸகாத் போன்ற விசேடமாக முக்கிய இஸ்லாமிய நிகழ்வுகள் யாவும் பிறை பார்த்தே ஆரம்பமாகும்.
ஏனைய மதத்தினருக்கு 12 மாதங்கள் உள்ளது போன்று, முஸ்லிம்களுக்கு 12 மாதங்கள் உள்ளன. இதில் துல்ஹைதா, ரஜப், துல் ஹஜ் முஹர்ரம், இந்த மாதங்கள் அதி சிறந்த மாதங்கள் என குர்ஆனில் அல்லாஹ் தெளிவு படுத்தியுள்ளார்.
இந்தப் புதிய மாதத்திலிருந்து எமக்கிடையே முரண்பாடுகளின்றி அமையாதியான சூழ்நிலையில் எல்லோரும் ஒன்றுபட்டு வாழ வழி வகுத்துக்கொள்ள வேண்டும்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
19 minute ago
1 hours ago
1 hours ago