2025 நவம்பர் 06, வியாழக்கிழமை

நானுஓயா வரை மட்டுமே ரயில்கள் ஓடும்

Editorial   / 2024 நவம்பர் 26 , மு.ப. 10:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ

பதுளை வரை இயக்கப்படும் பயணிகள் ரயில்கள் நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என ரயில்வே கட்டுப்பாட்டறை அறிவித்துள்ளது. .

  நானுஓயாவிலிருந்து பதுளை வரையிலான புகையிரத தண்டவாளங்களில் பல இடங்களில் மண், பாறைகள், மரங்கள் வீழ்ந்துள்ளமையினால், கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையில் பயணிக்கும் பயணிகள் புகையிரதங்கள் நானுஓயா வரை இயக்கப்படவுள்ளதாக ஹட்டன் புகையிரத நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நானுஓயா நிலையத்திற்கு இயக்கப்படும் புகையிரதங்கள் மீண்டும் திருப்பி கொழும்புக்கு இயக்கப்பட்டதாகவும், பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை வரை இயங்கும் எந்தவொரு பயணிகள் ரயிலும் செவ்வாய்க்கிழமை (26)  இயங்கவில்லை எனவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X