2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

நாயைக் கொன்ற ஹக்கப்பட்டஸ்

R.Maheshwary   / 2022 செப்டெம்பர் 27 , பி.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஸ

ஹட்டன் பிரதேசத்தில் உள்ள தேயிலைத் தோட்டங்களில் சுற்றித்திரியும் காட்டுப்பன்றிகளை வேட்டையாடுவதற்காக  ஹக்கப்பட்டஸ் வெடிமருந்துகள் வைக்கப்படுவதாகவும்  இதனால்  வீடுகளில் வளர்க்கப்படும்  நாய்கள் உயிரிழப்பதாகவும்  டிக்கோயா பிரதேச மக்கள்   தெரிவிக்கின்றனர்.

இன்று (27) காலை இவ்வாறு வைக்கப்பட்டிருந்த ஹக்கப்பட்டஸை கடித்த நாயொன்று, ​​ஹக்கப்பட்டஸ்  வெடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது.

இதன்போது பலத்த சத்தம் ஏற்பட்டதால் வெடி குண்டாக இருக்கலாம் என நினைத்த பிரதேசவாசிகள்,  ஹட்டன் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த ஹட்டன் பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்த போது, ஹக்கப்பட்டஸ் வெடி மருந்தை கடித்தமையால் நாய் உயிரிழந்தமை  தெரியவந்துள்ளது.

இதேவேளை, நாய் உயிரிழந்த சம்பவமானது, அருகில் உள்ள தேவாலயத்தில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கெமராவில் பதிவாகியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X