Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Editorial / 2025 ஜனவரி 05 , மு.ப. 11:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
இரண்டு நாய்களுடன் அரிசி மூடைகளை கொண்டு வந்த போது பலாங்கொடை பொது பாதுகாப்பு பரிசோதகர்கள் உதவியாளருடன் சாரதி கைது செய்யப்பட்டார். லொறியும் தடுத்துவைக்கப்பட்டுள்ளது.பலாங்கொடை நகரில் உள்ள கடைகளுக்கு விநியோகம் செய்வதற்காகவே இந்த அரிசி மூடைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
.பலாங்கொடை நகரின் பிரதான பேருந்து நிலையத்திற்கு அருகில் உள்ள கடையொன்றிற்கு அருகில் லொறி நிறுத்தி அரிசி மூட்டைகளை இறக்க முற்பட்ட போது, லொறியில் அரிசி மூட்டைகளுக்கு இடையில் இரண்டு நாய்கள் இருப்பதை கண்ட நகரை சேர்ந்த நபர் ஒருவர் அதனை தனது கைத்தொலைபேசியில் வீடியோ எடுத்து பொது பாதுகாப்பு பரிசோதர்களுக்கு அனுப்பியுள்ளார்.
அதன்படி லொறியை கைப்பற்றிய அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்
இந்த லொறியில் இருபத்தி ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிக விலைக்கு விற்கப்படும் அரிசி கையிருப்பு இருந்ததாகவும், இந்த லொறி திஸ்ஸமஹாராமவில் உள்ள அரிசி ஆலைக்கு சொந்தமானது எனவும் விசாரணைகளை மேற்கொண்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
01 May 2025