R.Maheshwary / 2022 ஜனவரி 19 , பி.ப. 01:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
ராமு தனராஜா
ஹாலிஎல -உடுவர பகுதியிலிருந்து தியத்தலாவ நோக்கி சென்று கொண்டிருந்த, மோட்டார் சைக்கிளொன்று, வீதியின் குறுக்கே சென்ற நாயின் மீது மோததி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்தச் சம்பவம் இன்று(19) காலை இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது, மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர், வயல்வெளிக்குள் தூக்கி வீசப்பட்டதால் காயமடைந்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸாரின் ஒத்துழைப்புடன் பதுளை வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்ட அவர், அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, காயமடைந்தவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .