Kogilavani / 2017 ஜூன் 21 , பி.ப. 06:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கணேசன்
ஹட்டன் எல்லைப் பகுதியில் குப்பைகளை வீதிகளில் எறிந்த நால்வருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளதாக, ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
வீதியில் குப்பையை வீசுபவர்களைக் கண்டறிவதற்காக, விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், இக்குழு குப்பைத் தொட்டிகளுக்கு அருகில் சிவில் உடையில் கடமைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஹட்டன் எல்லைப்பகுதியில் ஆங்காங்கே சீசீடிவி பொருத்தப்பட்டுள்ளதுடன், அறிவித்தல் பலகைகளும் வைக்கப்பட்டுள்ளன.
இவ் அறிவுறுத்தல்களையும் மீறி, நேற்றுக் காலை வீதிகளில் குப்பைகளை எறிந்த நால்வருக்கு எதிராகவே, இவ்வாறு வழக்குத்தாக்கல் செய்யவுள்ளதாக தெரிவித்த பொலிஸார், அவர்களை எச்சரித்து விடுவித்துள்ளனர்.
1 hours ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
3 hours ago