2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

நாவலப்பிட்டி நகர் நாளை வழமைக்குத் திரும்பும்

Kogilavani   / 2021 ஜனவரி 17 , பி.ப. 12:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

நாவலப்பிட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில், கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் 16 பேர் இனங்காணப்பட்டதையடுத்து, வெள்ளிக்கிழமை (15) முதல் மூடப்பட்டுள்ள நாவலப்பிட்டி நகரம், இன்று (18) வழமைக்குத் திரும்பும் என்று, நாவலப்பிட்டி நகர வர்த்தகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

வர்த்தக நிலையங்கள் அனைத்தும், இன்று திறக்கப்படவுள்ளன என்று, வர்த்தக சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதனையொட்டி, நாவலப்பிட்டி நகரசபை, பஸ்பாகே கோரளை சுகாதர வைத்திய காரியாலயம் என்பன இணைந்து, நகர் முழுவதும் தொற்றுநீக்கி தெளிக்கும் நடவடிக்கையில், நேற்று (17) ஈடுபட்டுள்ளன. 

நாவலப்பிட்டியில் இதுவரை 40 பேருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்படுள்ளதாகத் தெரிவித்த அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, நகரத்துக்கு வரும் நுகர்வோர் சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், இனிவரும் காலங்களில் கடுமையான முறையில் சுகாதார விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X