R.Maheshwary / 2022 ஜூலை 05 , மு.ப. 08:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேஹ்ன் செனவிரத்ன
கடந்த சில தினங்களாக கண்டி மாவட்டத்தில் மழை பெய்து வரும் நிலையில், பொல்கொல்ல நீர்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்ததால் சில வான்கதவுகள் திறக்கப்பட்டன.
இந்த நிலையில் விக்டோரியா நீர்த்தேக்கம் அமைந்துள்ள பாரகம பிரதேசத்தில் நீர் வற்றியிருந்த மண்மேட்டில் நின்று கொண்டிருந்த இரண்டு இளைஞர்கள், அதிகரித்த நீரால் சிக்கியதையடுத்து, பொலிஸ் உயிர் பாதுகாப்பு பிரிவினரால் கடும் பிரயத்தனங்களுக்கு மத்தியில் காப்பாற்றப்பட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் (3) மாலை 3.30 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் தலாதுஓயா பொலிஸாரால் தலதா மாளிகை பொலிஸ் பிலிவின் உயிர் பாதுகாப்பு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் 45 நிமிடங்கள் போராடி இளைஞர்களை மீட்டுள்ளனர்.
இவ்வாறு காப்பாற்றப்பட்ட இளைஞர்கள் இருவரும் 28,30 வயதுடையவர்கள் என்பதுடன், இவர்கள் குருதெனிய மற்றம் நுவரெலியா பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago