Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2023 மார்ச் 08 , மு.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
செ.தி.பெருமாள்
கடந்த சில மாதங்களாக மத்திய மலைநாட்டில் கடுமையான வெப்பம் நிலவும் நிலையில் நீர்த் தேக்கங்களில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது.
இதனால், நீர் மின்நிலைய மின்சாரம் உற்பத்தி நிலையங்களுக்கு நீரை வழங்கும் பிரதான நீர்த் தேக்கமான மவுஸ்சாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் அதன் கொள்ளளவை விட சுமார் 52 அடி குறைந்து 86 அடி நீரையே கொண்டுள்ளது.
நீர் குறைந்து வருவதால் நீர்த் தேக்க பகுதிகளில் உள்ள 50 வருடங்கள் நீரில் மூழ்கிய ஆலயங்கள் தற்போது தென்படுகிறது.
அதன் படி 1917 ம் ஆண்டு கட்டப்பட்ட சண்முக நாதர் ஆலயம் மற்றும் சித்தி விநாயகர் ஆலயம் இஸ்லாமிய பள்ளியின் மசூதி விஹாரையில் இருந்த புனித புத்தபகவானின் சிலை ஆகியன தென்படுகின்றன.
எது எப்படியாயினும் பழைய மஸ்கெலியா நகரில் 1917 ம் ஆண்டு கட்டப்பட்ட சண்முக நாதர் ஆலயம் 52 ஆண்டு காலமாக நீரில் மூழ்கிய நிலையில் இருந்தாலும் தற்போது மிகவும் கம்பீரமான தோற்றம் கொண்ட நிலையில் காட்சியளிக்கிறது.
அதனைக் பாதுகாக்க வேண்டிய கடமை இலங்கை மின்சார சபைக்கும் தொல் பொருள் ஆராய்ச்சி சபைக்கு உள்ளது.
ஆகவே இந்த அரும் பெரும் கட்டிடங்கள் மற்றும் பெளத்த சின்னங்களைக் காக்க வேண்டுமென இந்தப் பகுதியிலுள்ள அனைத்து மக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
42 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
42 minute ago
2 hours ago