Editorial / 2018 ஒக்டோபர் 01 , பி.ப. 05:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.சுஜிதா
நுவரெலியா - புனித சவேரியார் தேவாலய புனித பூமியின் நுழைவாயிலை நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, ஆலய பங்குத்தந்தை வணக்கத்துக்குரிய நேரியோ ஏப்ரஹாமின் தலைமையில், நேற்று (30) நடைபெற்றது.
இந்நிகழ்வில், நுவரெலியா மாநகரசபையின் மேயர் சந்தனலால் கருணாரட்ன கலந்துகொண்டு, அடிக்கல்லை நாட்டிவைத்தார்.
மேலும் இந்நிகழ்வில், ஆலயத்தின் பங்குத்தந்தை, உதவிப் பங்குத்தந்தை, பங்கு உறுப்பினர்கள், பங்கு மக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
நுழைவாயில் அபிவிருத்தித் திட்டத்துக்கு 1 மில்லியன் ரூபாய் தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளதெனத் தெரிவிக்கும் ஆலய நிர்வாகம், அதற்கான நிதியை, பங்கு மக்களிடமிருந்தும் நன்கொடையாளர்களிடமிருந்தும் பெற்றுக்கொள்வதற்குத் தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.
50 minute ago
01 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
01 May 2026